சச்சின் மகன் ஓவரில் தாண்டவமாடிய சூர்யகுமார்! – என்ன கோபத்துல இருந்தாரோ மனுசன்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (08:26 IST)
உள்ளூர் பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக தலைமை வகித்த சூர்யகுமார், சச்சின் மகன் அர்ஜூனின் ஓவரில் ரன்களை விளாசி தள்ளினார்.

இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடினாலும் சரவதேச போட்டிகளில் இடம் கிடைக்காமல் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய இவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று யஷ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான உள்ளூர் அணியை சூர்யகுமார் யாதவ் அணி எதிர்கொண்டது. ஜெய்ஸ்வால் அணியில் சச்சினின் மகன் அர்ஜுன் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அர்ஜுன் வீசிய பந்துகளை விளாசிய சூர்யகுமார் யாதவ் ஒரே ஓவரில் 21 ரன்களை வென்றார். இந்த போட்டியில் சூர்யகுமார் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்