தமிழ் கிரிக்கெட் வர்ணனைக்கு உயிர்கொடுத்த அப்துல் ஜப்பார் மரணம்!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (13:27 IST)
வானொலியில் தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவரும் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்தவருமான அப்துல் ஜப்பார் மரணம் அடைந்துள்ளார்.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கிரிக்கெட் வர்ணனையை கேட்டுக் கொண்டு இருந்த தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் மொழியில் அதை அறிமுகம் செய்து வைத்தவர் அப்துல் ஜப்பார். 1982 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை தமிழில் வர்ணனை செய்த பெருமைக்கு உரியவர் அப்துல் ஜப்பார். அவரின் தனித்துவமான தமிழ் வர்ணனைக்கென்ற ரசிகர்கள் உருவாகினர். அதையடுத்து தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை தொடங்கப்படட்தை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டார். 81 வயதான இவர் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ‘வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.’ என அஞ்சலி வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்