நேத்து Finals பாக்கலையா? மீண்டும் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (10:55 IST)
நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டிகள் நள்ளிரவில் நடந்த நிலையில் ரசிகர்களுக்காக மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாகச வெற்றி பெற்றும் 5வது முறையாக சாம்பியன்ஸ் மகுடன் சூடியுள்ளது.

முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்து முடித்த பின் மழை பெய்ததால் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்று போட்டி தொடங்க தாமதமானதால் 15 ஓவர்களே சிஎஸ்கேவுக்கு வழங்கப்பட்டு ரன்னும் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போட்டிகள் நள்ளிரவில் தொடங்கியதால் அடுத்த நாளை வேலைக்கு செல்ல இருந்த பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல் இறுதிப்போட்டி காலை 8.00 மணி, மதியம் 12.00 மணி மற்றும் மாலை 7.30 மணி ஆகிய மூன்று சமயங்களில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்