இன்னைக்கு யார் வேணாலும் அத செய்யலாம்… ஆனா விதை நான் போட்டது? – 13 ஆண்டுகளை நிறைவு செய்த சச்சினின் சாதனை சதம்!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:24 IST)
கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் அதன் கடவுள் சச்சின் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் சச்சின். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடிய அவர் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.சச்சின் டெண்டுல்கர் (1992-2011) ஆறு உலகக்கோப்பைகளில் விளையாடி சாதனை படைத்த அவர் சர்வதேசக் கிர்க்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் மற்றும் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனைக்கு எல்லாம் சொந்தக் காரராக உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்த இரட்டைசதம் எனும் மைல்கல்லை முதன் முதலாக சச்சின் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் எட்டினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கிய சச்சின் 147 பந்துகளில் 200 ரன்கள் என்ற சரித்திர சதத்தை அடித்தார்.

அதன் பின்னர் இப்போது ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் என்பது சாதாரண விஷயம் என்பது போல ஆகிவிட்டாலும், 13 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் அடித்த அந்த சாதனை சதம் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாதது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்