இந்தியாவுக்கு எதிரான ODI: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

வியாழன், 23 பிப்ரவரி 2023 (17:41 IST)
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்னும் இரு டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது.

இந்த  நிலையில், 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: நாக்பூர் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!
 
அதில், மேக்ஸ்வெல், மிட்செல், ஆகிய முக்கிய வீரர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களுடன், பேட் கம்மின்ஸ், ஆஸ்டன் அகர்,கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிச், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்க்லிஸ் லபுவேன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த ஒரு நாள் தொடரில், இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய அணி சவால் அளிப்பர் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்