உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

vinoth
செவ்வாய், 14 ஜனவரி 2025 (14:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான்.  இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியும் பறிக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை வரை அவரே கேப்டனாக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா மீண்டும் ஃபார்முக்கு வர தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளார். அதற்காக மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை ரஞ்சி அணியோடு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்