இந்திய அணிக்கு தோனி, கோலி போன்ற வெற்றிகரமான கேப்டன்களுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றார் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி டி 20 உலகக் கோப்பை தொடரை வென்றது. ஆனால் அதன்பின்னர் தொடர் தோல்விகளைப் பெற்று வருவதால் அவர் கேப்டன்சி மீதும் பேட்டிங் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அதிரடியாக ஆடி சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற வெற்றிகளின் மூலம் கேப்டனாக ரோஹித் ஷர்மா ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியாவுக்காக கேப்டனாகப் பொறுப்பேற்று அவர் பெற்ற 98 ஆவது வெற்றி இது.
இதன் மூலம் இந்தியாவுக்காக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தோனி 179 வெற்றிகளோடு முதலிடத்திலும், கோலி 137 வெற்றிகளோடு இரண்டாம் இடத்திலிம் அசாரூதின் 104 வெற்றிகளோடு மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.