வெஸ்ட் இண்டீஸில் பேட்டிங் செய்வது கடினமானக் கணக்கைப் போன்றது… ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (07:53 IST)
டி 20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் இப்போது நடந்து வருகிறது. இதுவரையில் நடந்த போட்டிகள் அனைத்தும் பவுலர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் பேட்டிங் செய்ய ஏதுவானவையாக இல்லை என்ற கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் குறித்து பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அவர் “வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்களில் பேட்டிங் செய்வது என்பது கடினமான கணக்கை தீர்ப்பது போன்றது. அதற்கு உங்களுக்கு பார்முலா சரியாக தெரிந்திருக்க வேண்டும்.

அங்குள்ள நிலவரம் பேட்டிங்குக்கு ஏதுவானதாக இல்லை என்றாலும் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவால் சிறப்பாக விளையாட முடியும். அதற்கான திறமை அவர்கள் இருவரிடமும் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்