ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தயாராகியுள்ளன. சன் ரைசர்ஸ், சென்னை, ஆர் சி பி, மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் ரேஸில் உள்ளன.
இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணியில் அதன் முன்னணி வீரர்கள் சில காயம் காரணமாக விலகியுள்ளனர். அது போல இங்கிலாந்து வீரர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என்பதால் வலுவிழந்து காணப்படுகிறது.
கௌகாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.