WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

Prasanth K

புதன், 11 ஜூன் 2025 (15:19 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியுள்ள நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இன்று தொடங்கும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த பல சர்வதேச போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி, இறுதி போட்டிகள் வரை முன்னேறி வருவதும், இறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறுவதும் தொடர்ந்து வருகிறது.

 

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ள நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

உஸ்மான் கவாஜா, மார்னேஸ் லபுஷென், கேமருன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், ப்யூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (வி.கீ), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜாஸ் ஹெசில்வுட்

 

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள்:

 

மார்க்ரம், ரியான் ரிகெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (வி.கீ), மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி எங்கிடி, 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்