நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் டிராவிட்டுக்கு ஓய்வு?

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (09:28 IST)
கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து உடனடியாக நியுசிலாந்துக்கு சென்று அங்கு 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு பதில் விவிஎஸ் லக்ஸ்மன் இந்த தொடருக்கு பயிற்சியாளராக செல்வார் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்