மீண்டும் ஒரு இறுதிப் போட்டி… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் உற்சாகம்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:08 IST)
நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது.  அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

அதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 7 விக்கெட்களை இழந்து போராடி இலக்கை எட்டியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து விக்கெட்டுக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் “உலகக் கோப்பையின் தொடக்கத்தில் எங்கள் பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால் இன்று எங்கள் பீல்டிங் அருமையாக இருந்தது. டிராவிஸ் ஹெட்தான் இன்றைய போட்டியின் நாயகன். அரைசதம் அடித்ததோடு மிடில் ஓவர்களில் இரண்டு  விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே சில வீரர்கள் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்கள். இப்போது இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அதுவும் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறோம்” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்