இந்திய அணியின் இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அபாரமான மெய்சிலிர்க்க வைக்கும் இன்னிங்ஸ்.அவர் நேற்று மைதானத்தில் வான வேடிக்கைக் காட்டினார். மைதானத்தின் 360 டிகிரியிலும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.