RCB அணியில் தனிப்பட்ட வீரர்களுக்கே முக்கியத்துவம்... அதனால்தான் இன்னும் கோப்பை வெல்லவில்லை - பார்த்திவ் படேல்!

vinoth
வெள்ளி, 19 ஜூலை 2024 (07:43 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கடைசி ஆறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கம்பேக் கொடுத்து ப்ளே ஆஃப்க்கு சென்றது. ஆனால் ப்ளே ஆஃபில் தோற்று வெளியேறியது. இதன் மூலம் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் அந்த அணியின் கனவு நனவாகவே உள்ளது.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடிய பார்த்திவ் படேல் அந்த அணி ஏன் இன்னும் கோப்பை வெல்லவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “அந்த அணியில் எப்போதுமே தனிநபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நான் அங்கிருந்த போது கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் கெய்ல் போன்றோருக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அங்கே அணிக் கலாச்சாரமே கிடையாது. இதை அவர்கள் விளையாடுவதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.  அதனால்தான் இதுவரை அவர்கள் கோப்பையை வெல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்