“உலகக் கோப்பை மேல கால் வச்சதுல எந்த தப்பும் இல்ல… மறுபடியும் வேணும்னாலும் செய்வேன்” – மிட்செல் மார்ஷ் விளக்கம்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (09:51 IST)
கடந்த வாரம் நடந்து முடிந்த ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன்  மூலம் ஆறாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது ஆஸ்திரேலிய அணி. இது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கோப்பையோடு வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றன. அதில் ஆஸி அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மேல் கால் மேல் கால் போட்டு போட்டோ எடுத்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகினார் மார்ஷ்.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள மிட்செல் மார்ஷ் “நான் அப்படி செய்ததில் எந்த தவறும் இல்லை. நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் அப்படி செய்யவில்லை” எனக் கூறினார். அப்படியென்றால் மீண்டும் அதே மாதிரி செய்வீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு ”நேர்மையாக சொல்வதானால் ஒருவேளை செய்யலாம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்