கேக்கல.. இன்னும் சத்தமா..! – ரசிகர்களை விசிலடிக்க சொன்ன கோலி!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (14:13 IST)
சென்னையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் ரசிகர்களை விசிலடிக்க சொல்லி கோலி சைகை செய்வது வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் சென்னையில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸின் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 95.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணியை 48 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 105 ரன்களே அளித்துள்ளது இந்தியா அணி.

இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் ஃபீல்டிங் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி பார்வையாளர்களை நோக்கி “விசில் சத்தம் கேக்கல.. இன்னும் சத்தமா..” என சைகை காட்டுவது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்