உலக கோப்பையில் கோலி பிரகாசிக்க 3 ஆவது இடமே சரியானது: சேப்பல் கருத்து

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (11:55 IST)
களத்தில் 4 ஆவது இடத்திற்கு மாற்றப்பட்ட துணை கேப்டன் கோலி அந்த இடத்தில் பெரிதாக பிரகாசிக்காததால் அவருக்கு 3 ஆவது இடமே ஏற்றது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
11 ஆவது உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளது. இப்போட்டிகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதால் உலககோப்பை போட்டிகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளிவந்த வண்ணம்வுள்ளன.
 
இந்நிலையில் முத்தரப்பு தொடரில் கோலி 4 ஆவது வீரராக களம் இறங்குவது இந்திய அணிக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதன் விளைவால் கோலி 3 ஆவது வீரராக விளையாடுவதே சிறந்தது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார். 
 
இதுகுறித்து சேப்பல் கூறுகையில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் உலக கோப்பையை தொடரில் அதிகபட்சமான ரன்களை எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சு பெரிதாக எடுபடுவதில்லை. ரோகித் ஷர்மா, கோலி இருவரும் தொடக்க நிலையில் களம் கண்டால்  ஷாட் பிட்ச் பந்துகளை திறம்பட சமாலித்து எதிரணிகளை களங்கடிக்கும் திறன்கொண்டவர்கள் என சேப்பல் கூறியுள்ளார்.