டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

Senthil Velan

சனி, 22 ஜூன் 2024 (12:26 IST)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  அமெரிக்கா அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6வது போட்டி பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்க வீரர்கள், மேற்கிந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே அமெரிக்கா அணி எடுத்தது.
 
மேற்கிந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரஸ்ஸல், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை அள்ளினர். எளிய இலக்கை துரத்திய மேற்கிந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாய் ஹோப் அமெரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங்கால் திணறடித்தார். 

ALSO READ: கோயம்பேட்டில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக..! அன்புமணி வலியுறுத்தல்..!!
 
10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய  அணி அபார வெற்றி பெற்றது. சாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 39 பந்துக்கு 82 ரன்களை குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி, மேற்கிந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்