வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

vinoth

சனி, 22 ஜூன் 2024 (15:25 IST)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த போட்டி வங்கதேசத்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக ஆப்கானிஸ்தானுடனான போட்டியை முடித்துவிட்டு 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆண்டிகுவா நகரத்துக்கு சென்றனர்.

அதனால் அடுத்த நாள் விருப்பப்படும் வீரர்கள் மற்றும் பயிற்சியில் ஈடுபடலாம் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்திருந்ததால் பெரும்பாலான வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்