ஷேம், ஷேம் பப்பி ஷேம்: நிர்வாணமாக ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 22 மே 2017 (15:21 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். அவர் தனது நாட்டு கிரிக்கெட் அணியில் இருந்து அழைப்பு வந்ததும் இங்கிலாந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.


 
 
10-வது ஐபிஎல் போட்டியின் இறுதியாட்டம் மும்பை-புனே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் பரபரப்பான இறுதி ஓவரில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியடைந்தது.
 

இந்த போட்டியை தனது வீட்டில் நண்பர்களுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஜோஸ் பட்லர் மும்பை அணி வெற்றி பெற்றதும் சந்தோசத்தில் தான் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆட்டம் போட்டார். வீடியோவாக பதிவாகியிருந்த அந்த காட்சியை அவரே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்