ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்… ஜோ ரூட் தகவல்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (09:32 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோ ரூட் சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் விளையாடாமல் தவிர்த்து வந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், ஜோ ரூட் உலகக் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 32 வயதாகும் அவர் சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். 32  வயதாகும் அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காத அவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “ஐபிஎல் ஏலம் குறித்து யோசித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் டி 20 கிரிக்கெட்டில் விளையாடலாம் என இருக்கிறேன். இந்த வடிவத்தில் என்னை நானே அந்நியப்படுத்திக் கொண்டதாக உணர்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்