வீட்டில் தடுக்கி விழுந்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் – மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்கம்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (11:38 IST)
ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் சமனான நிலையில் இப்போது 7 ஆம் தேதி சிட்னியில் மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது. அந்த போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் நீக்கப்பட்டுள்ளார்.

முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடாத அவர் மூன்றாம் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தடுமாறி விழுந்ததில் அடிபட்டதால் அவர் இப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நான்காவது போட்டிக்கு முன்னர் அவருக்கு உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் குணமானால் அவர் சேர்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்