இன்ஸ்டாகிராமை அதிர விடும் ரொனால்டோ! – 25 கோடி ஃபாலோயர்ஸ்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (11:12 IST)
உலகளவில் அதிகமான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர் ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோவர்ஸை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் க்ரிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான ரொனால்டோ லா லிகாவில் ஹுவாந்தஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த லா லிகா போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியை வெற்றி பெறவும் செய்தார்.

பல்வேறு விருதுகளை வென்றுள்ள ரொனால்டோ ரசிகர்கள் மத்தியிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 25 கோடியை தாண்டியுள்ளது. உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 25 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட நபர் என ரொனால்டோ இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்