ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதே போல பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல், அல்ஜாரி ஜோசப், ஷாருக் கான் உள்ளிட்ட பல வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். ஆனால் பல வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் கோரப்படாமல் அன்சோல்ட் ஆனார்கள்.
இந்த ஏலத்தை மல்லிகா சாகர் சிறப்பாக நடத்தினார். ஆனால் இடையில் அவர் ஒரு சிறு தவறை செய்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்பின் ஏலத்தின் போது பெங்களூர் அணி ஏலம் கேட்ட போது 6.6 கோடி ரூபாய்க்கு 6.8 கோடி ரூபாய் என தவறாக அறிவித்துவிட்டார். இறுதியில் பெங்களூர் அணி அவரை 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்தாலும், இதனால் பெங்களூர் அணிக்கு 20 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.