ஆசியக் கோப்பை தொடர் எப்போது? எங்கு? வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:14 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியைத் தவிர மற்ற போட்டிகளைக் காண ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அந்த போட்டியும் விறுவிறுப்பாக இல்லாமல் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி  செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு டி 20 வடிவில் நடக்கிறது. பிசிசிஐ ஏற்று நடத்தவுள்ள இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இதில் 8 அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்