சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக, பாகிஸ்தானைப் போலவே அந்த அணியும் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹீம் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை அடுத்து, 326 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.