உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. நான் இருக்கேன்! காலில் விழுந்த ரசிகருக்கு தோனி கொடுத்த வாக்குறுதி!

Prasanth Karthick
புதன், 29 மே 2024 (19:35 IST)
சமீபத்தில் ஐபிஎல் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்து தோனி காலில் விழுந்த ரசிகருக்கு சமீபத்தில் முக்கியமான அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.



சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இறங்கி சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். சிஎஸ்கே ப்ளே ஆப் செல்லாவிட்டாலும் தோனி அடிக்கும் சிக்ஸர்களை பார்க்க கிடைத்ததே பாக்கியம் என ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தனர். அப்படியாக அகமதாபாத்தில் நடந்த போட்டியின்போது தோனி பேட்டிங் செய்தபோது அவரது தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடினார்.

அவரிடம் தோனி விளையாட்டு காட்ட, கடைசியாக தோனியின் காலில் அந்த ரசிகர் விழுந்தார். பின்னர் அவர் தோனியிடம் ஏதோ பேசினார். தோனியும் பதிலுக்கு ஏதோ சொன்னார். அது என்ன என்று இப்போது தெரிய வந்துள்ளது.

ALSO READ: அஜித்தின் முதல் படத்திற்கு நான் தான் உதவி செய்தேன்: சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்..!

அந்த ரசிகர் மூச்சு திணறல் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். விரைவில் அவருக்கு சர்ஜரி நடக்க இருந்த நிலையில் அதற்கு முன்பாக தோனியை பார்க்க வேண்டுமென ஓடி வந்துள்ளார். தோனியிடமும் தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதை கூறியுள்ளார்.

அதற்கு தோனி ”உனது அறுவை சிகிச்சையை நான் பார்த்துக் கொள்கிறேன். எதுவும் ஆகாது கவலைப்படாதே. உனக்கு எதுவும் நடக்க விட மாட்டேன்” என கூறியுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ள அந்த ரசிகர் தோனியுடன் தான் பேசிய அந்த அனுபவத்தை சொல்லியுள்ளார். தற்போது அந்த ரசிகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்