இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் ஸ்டார் கிரிக்கெட்டரான எம்.எஸ்.தோனி அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டாலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசந்தான் தோனிக்கு கடைசி சீசன் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்காக இந்த முறை கண்டிப்பாக சிஎஸ்கே கப் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
தற்போது சென்னை அணி போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் தோனிக்கு காலில் பட்ட காயம் காரணமாக விரைவில் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்தால் தோனி கண்டிப்பாக 5 முதல் 6 மாதங்கள் வரை கட்டாய ஓய்வில் இருந்தாக வேண்டும். அதன்பின்னர் மீண்டும் பழையபடி அவர் விளையாட வேண்டும் என்றால் மீண்டும் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தற்போது 42 வயதாகும் தோனி மீண்டும் அவ்வளவு பயிற்சிகளை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளது.
இதனால் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமே என பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல்லுக்கு மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால் பல வீரர்களை பல அணிகள் துறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இதில் சென்னை அணி என்ன முடிவு எடுக்கும் என்பதும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இவ்வளவையும் மீறி தோனி அடுத்த சீசனில் வந்தால் கொண்டாட அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.