என்னை அணியில் இருந்து நீக்கவில்லை… பிசிசிஐக்கு நன்றி- ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (09:08 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன.

அவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்கையில் அவர் தோனியிடம் இருந்து அதிகம் கற்று இருப்பார் என தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார். இதையடுத்து தற்போது இந்திய அணியில் ஹர்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் வந்திருப்பது குறித்து பேசியுள்ள பாண்ட்யா “குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நான் என்ன செய்தேனோ அதையே இந்திய அணிக்கும் செய்ய உள்ளேன். எல்லோரும் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் நான்தான் நீண்ட நாள் ஓய்வில் இருந்தேன். என்னை ஓய்வில் இருக்க அனுமதித்த பிசிசிஐக்கு நன்றி. அவர்கள் என்னை மீண்டும் அணிக்குள் வர சொல்லி கேட்கவே இல்லை.” எனக் கூறியுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஹர்திக் காயங்களால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பல போட்டிகளில் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்து வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்