இந்த நேரத்துல ஐபிஎல் ரொம்ப முக்கியமா? – ரத்து செய்யக்கோரி வழக்கு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (12:29 IST)
ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாளைய ஆட்டத்தை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஐபிஎல் வீரர்களுக்கே தற்போது கொரோனா உறுதியாகியுள்ள சூழலில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்