தமிழில் கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பியாவின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி கிடைக்காததாக தெரிகிறது. இதனால் தனது சகோதரனுக்கு வெண்டிலேட்டர் அவசரமாக தேவைப்படுவதாகவும் உதவுமாறும் பியா ட்விட்டர் மூலமாக சில மணி நேரங்கள் முன்னதாக உதவி கேட்டிருந்தார். இந்நிலையில் வெண்டிலேட்ட்டர் உதவி கிடைப்பதற்கு முன்னதாகவே அவரது சகோதரர் இறந்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவரே தற்போது ட்விட்டரில் தனது சகோதரன் இறந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.