ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிஎஸ்கே மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை அளித்து வருவதாகவும், இந்த பாதிப்பால் சிஎஸ்கே அணி வீரர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளதால் நாளை சன்ரைஸர்ஸுடன் நடைபெற இருந்த போட்டியை துறப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.