டெல்லி அணி வீரருக்கு கொரோனா; வீரர்களுக்கு பரிசோதனை! – புனே பயணம் ரத்து!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:13 IST)
ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அவர்களது புனே பயணம் ரத்தாகியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நாளை மறுநாள் பஞ்சாப் அணியுடன் மோத புனே செல்ல இருந்தது.

இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லி அணியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்