மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:54 IST)
மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால் ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி பெற்ற சான்றுகளுடன் வரவேண்டும் என ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது 
 
இதன் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ஏப்ரல் 13 மற்றும் 23ம் தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து இந்தியா வரும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்