இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸி மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவரான கோலி ஒரே ஒரு சதத்தை தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பினார்.
கோலியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் அவர் அதிகமுறை கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறுகிறார். ஆனால் அந்த பந்துகளை அடிக்காமல் விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள்.