டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறும் டேவிட் வார்னர்? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:47 IST)
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய கிரிக்கெட் வீரர்களை தாண்டி ஒரு சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனங்களை வெல்ல முடியும். அப்படியாக பலரது மனங்களை வென்றவர்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்ம்களிலும் விளையாடி வரும் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் முன்னதாக சன்ரைசர்ஸ் அணிக்கும், தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் விளையாடி வருகிறார்.

கிரிக்கெட் தாண்டி டேவிட் வார்னரை பலருக்கும் பிடிக்க செய்தது அவர் செய்யும் டிக்டாக் வீடியோக்கள். இந்திய திரையிசை பாடல்கள், முக்கியமாக தமிழ், தெலுங்கு பாடல்களுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடி வீடியோ போடுவது வார்னரின் வாடிக்கை. சென்னை வெள்ளத்தின்போது சென்னை மக்கள் நலனுக்காக வேண்டி பதிவிட்டவர் டேவிட் வார்னர்.

லண்டனில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலிய உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிபோட்டியில் டேவிட் வார்னரும் விளையாட உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “இப்போது என் கவனம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்ளது. அதன் பின்னர் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும். பாகிஸ்தான் உடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்வேன்.

டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியில் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்