சென்னை கிங்ஸ் அவுட்….ஃபிளே ஆஃப் சுற்று தேதியை அறிவித்த பிசிசிஐ !

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (09:05 IST)
ஐபிஎல்-2020 தொடரில்ன் ஃபிளே ஆப் சுற்று, மற்றும் இறுதிப் போட்டி எப்போது நடைபெறும் என்பது  குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல்-2020 தொடரின் ஃபிளே ஆப் சுற்று குறித்த அறிவிப்பை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல்-2020 தொடரில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதிவரையும்,  எலிமினேட்டர் போட்டி வரும் 6 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

மேலும் நவம்பர் 8 ஆம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்றிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் அபுதாபியில் நடைபெறவுள்ளதாகவும், இறுதிப்போட்டில் வரும் நவம்பர் 10 ஆம்தேதி துபாயிலும் நடைபெறவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போவது இதுதான் முறை என்பதால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் நேற்று பெற்ற வெற்றி ஆறுதல் தந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்