சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:48 IST)
இந்திய அணியின் இளம்  வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நடந்து வரும் பெர்த் டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம்.

அவரின் இந்த அற்புதமான் இன்னிங்ஸின் போது வர்ணனையாளர்கள் அவரை ‘நியு கிங்’ என வர்ணித்தனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஜெய்ஸ்வால் தற்போது சச்சின் படைத்த பல ஆண்டு சாதனை ஒன்றை முறியடிப்பதற்கு வெகு அருகில் உள்ளார்.

இந்திய அணிக்காக ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் ஒரு ஆண்டில் 1562 ரன்கள் சேர்த்ததே இதுவரை அதிகபட்சம். அதைக் கடக்க ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 283 ரன்கள் மட்டுமே வேண்டும். அவருக்கு இந்த ஆண்டில் அதை செய்ய இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்