ஐபிஎல் போட்டிகளில் பூம்ரா விளையாட மாட்டாரா? எப்பதான் அணிக்கு திரும்புவார்?

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (14:57 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர்  பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது.

ஆனால் இப்போது பூம்ராவுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாட மாட்டார் என சொல்லப்படும் நிலையில் நேரடியாக 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்