முதல் இரண்டு போட்டியை தோற்றாலும்.. முடிவு வேற மாதிரி இருக்கும் – பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:32 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளையும் தோற்று 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு அவர்களின் அதிரடியான பேஸ்பால் ஆட்டமுறைதான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர் “ முதல் இரண்டு போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வென்று இறுதி முடிவை 3-2 என்ற கணக்கில் முடிப்போம் என நம்புகிறோம்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்