சென்ற ஆண்டு கோலி… இந்த ஆண்டு பாபர் ஆசாம்… கடுமையான விமர்சனங்களை சந்தித்த கேப்டன்கள்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (09:25 IST)
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கேப்டன்சி தவறுதல்களுக்காக கடுமையான விமர்சனங்களைப் பெற்று பெற்று வருகிறார்.

இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. இதில் போட்டியில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்த பாகிஸ்தானிடம் இருந்து விராட் கோலி, போராடி பறித்து இந்திய அணியை வெற்றிப் பெறவைத்தார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாகிஸ்தான் அணி மீண்டும் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்து அடுத்த சிக்கலுக்குள் சென்றது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் மற்றும் முகமது ஆமீர் ஆகியோர் அவரை விமர்சித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே போல கோலி, கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்