IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:50 IST)

IND vs AUS Test: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா சொற்ப ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

 

 

சொந்த மண்ணிலேயே நியூசிலாந்திடம் வொயிட் வாஷ் ஆன இந்திய அணி, ஆஸ்திரேலியாவிலாவது சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த தொடர் தொடங்கும் முன்பிருந்தே இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக சித்தரிக்கப்பட்ட விராட் கோலி 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடியவர்களில் ரிஷப் பண்ட் (37 ரன்கள்), நிதிஷ்குமார் ரெட்டி (41 ரன்கள்) சற்று ஆறுதலான ஆட்டத்தை அளித்தார்கள். நிதிஷ் குமார் ரெட்டி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என கடைசி நேரத்தில் துள் கிளப்பி அதிர்ச்சிகரமாக அவுட் ஆனார்.

 

இவர்கள் தவிர்த்த மற்ற ப்ளேயர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணி 49.4 ஓவர்களிலேயே வெறும் 150 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்துள்ளது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆஸ்திரேலியா தொடங்க உள்ள நிலையில், 150 ரன்களை இன்றைய நாளுக்குள்ளேயே ஆஸ்திரேலியா எளிதில் தாண்டிவிட வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணியில் அஸ்வின் இல்லாததும், பும்ரா கேப்டனாக செயல்பட வேண்டியுள்ளதும் பவுலிங்கை பலவீனமாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்