சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:45 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக அறியப்பட்டவர்  அலஸ்டர் குக். இவர்  கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இவர்,  சர்வதேச கிரிக்கெட்டில்  33 சதங்கள் அடித்துள்ளார். 44.88 சராசரியில் 12,472  ரன்களுடன் அதிக டெஸ்ட் ரன் எடுடத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, தன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் அறிவித்துள்ளார். இவரது முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்