முதல் பந்தில் விக்கெட் விழுந்தாலும் சிறப்பான இலக்கு கொடுத்த வங்கதேசம்.. நியூசிலாந்து சமாளிக்குமா?
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (18:02 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் பந்திலையே விக்கெட் இழந்து தத்தளித்தாலும் அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சுதாரித்து விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் 50 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் என்ற எடுத்துள்ளது. ரஹீம் 66 ரன்களும், கேப்டன் ஷாகிப் ஹசன் 40 ரன்கள் எடுத்து அணியின் ஓரை ஓரளவு உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் 246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி ஜெயித்துவிட்டால் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது