2nd Test: ஸ்ரீலங்காவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 580 ரன்கள் குவித்து டிக்ளேர்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (17:17 IST)
நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான  2 வது டெஸ்ட் போட்டியில்  இன்று முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 26 ரன்கள் எடுத்து களத்திலுள்ளது.

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தார்.

எனவே, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 48 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  இதையடுத்து, போதிய வெளிச்சமின்றி முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், வில்லியம்சன், ஹெனி இருவரும் முறையே 26 ரன்னிலும், நிக்கோல்ஸ் 18 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இன்றைய 2 வது ஆட்ட நேரத்தில், இருவரும் சிறப்பாக விளையாடி,  அதிக ரன்கள் சேர்த்தனர். இதில், வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார்.

வில்லியம்சன்- நிக்கோலஸ் ஜோடி 3 வது விக்கெட்டிற்கு இணைந்து 363 ரன்கள் எடுத்தனர்.  இதையடுத்து, நிக்கோலஸும் இரட்டை சதம் அடித்தார். எனவே நியூசிலாந்து, 123 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் அறிவித்தது.

இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல்நாள் ஆட்ட  நேரமுடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்கள் அடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்