குழந்தைகளின் முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான். 6 மாதங்களுக்குமுன் அதற்கு திட உணவு தேவைப்படாது. அதற்கு நீர் அல்லது மற்ற பானங்கள எதுவும் தேவையில்லை.
தாய்ப்பால் சிறப்புமிக்கது. குழந்தை பிறந்ததும் சுரக்கும் முதல் பால், கிரீம் நிறைந்தது, வைட்டமின்கள் செறிந்தது, மேலும் தொற்றுக்களை எதிர்ப்பதற்கு குழந்தைக்கு உதவும் உணவுகளைக் கொண்டது. இவை அதனை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன.
அதன்பின், பால் வெண்மையாகவும், கெட்டித்தன்மை குறைவாகவும் மாறிவிடும். இது குழந்தையின் தாகத்தைத் தணிப்பதால், வெப்பநிலை சூடாக இருந்தாலும், அதற்குத் தண்ணீர்கூடத் தேவைப்படுவதில்லை. குழந்தையின் தேவைகளுக்கேற்ப பால் மாற்றமடைகிறது.
குழந்தை எந்த அளவிற்கு பாலருந்துகிறதோ, அந்த அளவிற்கு உங்களுக்கு அதிகமாகப் பால் சுரக்கும். மார்பகங்கள் சிறிதாக இருந்தாலும், உங்கள் குழந்தைக்குத் தேவையான போதிய அளவு பாலை உங்கள் உடல் உருவாக்கும்.
குழந்தையின் வயிறு, நுரையீரல்கள், சிறுநீர்ப்பை, தோல் மற்றும் காதுகளில் உள்ள கிருமிகளை எதிர்ப்பதற்கு தாய்ப்பால் உதவுகிறது. முதல் ஆண்டில் தாய்ப்பால் மட்டுமே குடிக்கின்ற குழந்தைகள், மற்ற பால்கள் புகட்டப்படும் குழந்தைகள் அளவிற்கு நோயுறுவதில்லை.
6 மாதங்களுக்குப்பின், வளர்ந்து வருகின்ற உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலைக் காட்டிலும் கூடுதலான உணவு தேவை. ஆனால், திட உணவை சாப்பிடுவதற்கு அது பழகிக் கொண்டிருக்கும்போதும், அதற்கு 2 வயது ஆகும்வரையிலும், தாய்ப்பாலும் மிகவும் அவசியமானது.