குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் என்ன...?

Webdunia
சிறியவர் முதல் பெறியவர் வரை உடல் நல பாதிப்பு என்பது இயற்கையாகவே ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள் நுழைவதனால் தான் உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது.
இயற்கையாகவே குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் அதை பெற்றோர்கள் தான் எதிர்க்கொள்ள வேண்டும். இது பெற்றோர்களின் கடமையாகும். மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
குழந்தை பிறந்தவுடனே எப்போதெல்லாம் தடுப்பூசி போடவேண்டும் என்று பட்டிலை தந்து விடுவார். எனவே பட்டியலிடப்பட்ட நாட்களில் தன்  குழந்தையின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.
 
உடலில் நுழையும் நோய் கிருமிகளை எதிர்க்க நம் உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் மருந்தின் அளவானது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாறுப்படும். இந்த எதிர்ப்பு மருந்தானது உடலுக்குள் நுழையும் போது உடலில் நுழைந்த கிருமிகளை  அழித்து உடல் நலம் சரியாகிவிடுகிறது.
 
குழந்தைகளுக்கான எதிர்ப்பு மருந்து உடலுக்குள் சுரப்பதற்கு பதிலாக தடுப்பூசி மூலம் குழந்தைகளுக்கு உடலுக்குள் செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு செலுத்தப்படும் மருந்தின் அளவு, செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது, சில தடுப்பூசி மருந்துகள் குழந்தையின்  ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டு இருக்கும்.
 
குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் எல்லாம் சமமானது அல்ல இதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சில தடுப்பூசி  மருந்துகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.
 
உயிர் கொல்லி நோயை எதிர்க்க போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதுவும் போடப்படும் தடுப்பூசிகள் ஏதேனும் ஒரு நோயை  மட்டும் எதிர்க்கிறதா அல்லது தொடர்ந்து வரும் நோய்களை எதிர்க்கிறதா என்று தடுப்பூசின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்