செய்முறை:
கற்றாழை பாயசம் செய்வதற்கு முதலில் கற்றாழையில் இருக்கும் தோல்பகுதியை சீவி நன்றாக சுத்தம் செய்து பொடிதாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள். பின்னர் வெல்லம் கரைந்ததும் அவற்றில் கற்றாழையை சேர்த்து சிறிது நேரம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமுள்ள மற்றும் சுவையான கற்றாழை பாயசம் தயார்.