ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:01 IST)
5 மொழிகளில் தயாராகும்  ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 
ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். 
 
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்