சன்னி லியோனுக்கு கூடிய கூட்டம்: திக்கு முக்காடிய கொச்சி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (18:35 IST)
கொச்சியில் நடந்த செல்போன் கடை திறப்பு விழாவில் சன்னி லியோ கலந்துக்கொண்டார். அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 


 
 
பாலிவுட்டில் முழுநேர நடிகையாக மாறியுள்ள சன்னி லியோன், தற்போது ரொம்ப காஸ்ட்லியான நடிகை. சமீபத்தில் அவர் கொச்சிக்கு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது, மக்கள் பெருமளவு அந்த கடை அமைந்த சாலையில் திரண்டு விட்டனர். 
 
அந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளே காணப்பட்டது. இதுகுறித்து சன்னி லியோன், கொச்சி நகர மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ வைத்துள்ளது என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்